தெரசா என்று கத்திய மனிதன்- இடாலோ கால்வினோ-Man Who Shouted Teresa

manshoutedteresaதெரசா என்று கத்திய மனிதன்

இடாலோ கால்வினோ

தமிழில் பிரம்மராஜன்

நான்  நடைபாதையை  விட்டிறங்கி, பின்பக்கமாக நடந்து சில தப்படிகள் முன்னோக்கி,  தெருவின் மையத்தில் இருந்து, என் கைகளை ஒரு மெகாஃபோன் மாதிரி குவித்து, அங்கிருந்த கட்டிடத்தின் மேல்மாடிகளை நோக்கி உரக்கக் கத்தினேன்: ”தெரசா!”

நிலவைப் பார்த்து பயமுற்ற என் நிழல் என் இரண்டு கால்களுக்கிடையில் பயந்து ஒடுங்கிக் கொண்டது.

யாரோ  ஒருவர்  இந்தப்  பக்கமாக  நடந்து  வந்தார்.  மீண்டும் நான் உரக்கக் கத்தினேன்: ”தெரசா!” அந்த மனிதன் என்னருகில் வந்து இவ்வாறு கூறினான்: ”நீங்கள் இன்னும் உரக்கக் கத்தவில்லை  என்றால்  அவளுக்கு  உங்கள் குரல் கேட்காது. நாம் இருவரும் சேர்ந்து முயல்வோம். ஆக மூன்று வரை எண்ணிவிட்டு  மூன்றாவதன்  போது  நாம்  இருவரும்  சேர்ந்து கத்துவோம்”. அவன் மேலும்  சொன்னான்: ”ஒன்று இரண்டு மூன்று.” நாங்கள் இருவரும் கூவினோம். ”தெ-ரெ-சா!”

சினிமாக் கொட்டகையிலிருந்தோ அல்லது காபி விடுதியிலிருந்தோ திரும்பிக் கொண்டிருந்த நண்பர்களின் சிறு குழு ஒன்று நாங்கள் கத்துவதைக் கவனித்தது. அவர்கள் சொன்னார்கள்: ”சரி.  நாங்களும்  கூட  உங்களுக்காக ஒரு முறை சப்தம் கொடுப்போம்”.   அவர்கள்   தெருவின் நடுவில் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். முதல் மனிதன் ஒன்று இரண்டு மூன்று சொல்ல எல்லோரும் சேர்ந்து கத்தினோம்:

”தெ-ரெ-சா!”

வேறு யாரோ அந்தப் பக்கம் வந்தவர்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.  கால்மணி  நேரத்திற்குப் பிறகு நாங்கள் ஒரு கூட்டமாக, ஏறத்தாழ இருபது பேர்கள் இருந்தோம். அப்பொழுதைக்கப்பொழுது யாராவது புதிதாக அந்தப் பக்கமாக வந்தார்கள்.

ஒரே சமயத்தில் ஒரு நல்ல சப்தம் கொடுப்பதற்கு ஒருங்கிணைத்துக் கொள்வது எளிமையாக இருக்கவில்லை.  எப்பொழுதுமே  யாராவது  ஒருவர்  மூன்று எண்ணுவதற்கு முன்பே  தொடங்கி  அல்லது  அதற்குப்  பிறகு  நீண்ட  நேரம் கத்திவிட்டார்.  ஆனால்  இறுதியில்  ஓரளவுக்குத்  திறமையான ஒன்றை நாங்கள் செய்து கொண்டிருந்தோம். ”தெ”   என்பது நீச்சமாகவும்  நீளமாகவும், ”ரெ”  என்பது  உச்சமாகவும் நீளமாகவும், ”சா”  என்பது  அமுங்கியும்  குறுகியும்  இருக்க வேண்டும்  என்ற  ஒப்புதலுக்கு  வந்தோம்.  அது  சிறப்பாகத் தோன்றியது.  அப்பொழுதைக்கப்பொழுது யாரோ ஒருவர் வெளியேறும்போது கூச்சலும் குழப்பமுமான சச்சரவு உண்டாயிற்று.

எங்களுக்கு  அது  சரியாக  வந்து  கொண்டிருக்கும் பொழுது,  யாரோ  ஒருவர்,  அந்தக்  குரலை வைத்துச் சொல்வதாயிருந்தால், அவர் முகம் புள்ளிகள் கொண்ட தாகத்தான்  இருக்க  வேண்டும்,  கேட்டார்: ”ஆனால் உறுதியாக அவள் வீட்டில் இருக்கிறாளா என்பது தெரியுமா?”.

”இல்லை.” நான் சொன்னேன்.

”அது மோசம்.” மற்றொருவர் சொன்னார்: ”உங்கள் சாவியை மறந்து விட்டீர்களா? அப்படியா?”.

”நிஜத்தில்” நான் கூறினேன். ”என் சாவி என்னிடம் உள்ளது.”

”அப்படியானால்”, அவர்கள் கேட்டார்கள். ”ஏன் நீங்கள் மேலே போகக்கூடாது?”

”ஆனால் நான் இங்கே வசிப்பவன் இல்லை”. என்று பதில் சொன்னேன்.”நான் நகரின் அந்தப் பக்கத்தில் வசிக்கிறேன்”.

”சரி. அப்படியானால் பிறர் காரியங்களில் ஆர்வமுள்ள என் துடிப்பை மன்னியுங்கள்”, புள்ளிகள் நிறைந்த முகத்துக்காரன் கவனமாகக் கேட்டான்: ”ஆனால் யார்தான் இங்கு வசிக்கிறார்கள்?”

”எனக்கு நிஜமாகத் தெரியாது.” நான் சொன்னேன்.

அது பற்றி அங்கிருந்தவர்கள் தொந்தரவான உணர் வடைந்தார்கள்.

”எனவே தயவு செய்து நீங்கள் விளக்கம் தருவதற்கு முடியுமா?” மிகவும் பல்சார்ந்த குரல் கொண்ட யாரோ ஒருவர் கேட்டார், ”ஏன் இங்கு நின்று கொண்டு தெரசாவைக் கத்தி அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

”என்னைப் பொருத்தவரையில்” நான் சொன்னேன், ”நாம் வேறு ஒரு பெயரைக் கூப்பிடலாம் அல்லது வேறு எங்காவது முயற்சி செய்து பார்க்கலாம். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை.”

மற்றவர்கள் சிறிது தொந்தவராக உணர்ந்தார்கள்.

”நீங்கள் எங்களை ஏமாற்றவில்லை என்று நான் நம்புகிறேன்”, புள்ளிகள் நிறைந்த முகத்துக்காரன் சந்தேகமாகக் கேட்டான்.

”என்னது?” நான் கேட்டேன், கோபமாக, மற்றவர்களிடம் திரும்பினேன் எனது நன்னம்பிக்கையை உறுதிப்படுத்தும் பொருட்டு. மற்றவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. இந்தத் தூண்டிவிடுதலை அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை.

ஒரு தர்மசங்கடமான கணம் நிலவியது.

”கவனியுங்கள்,” யாரோ ஒருவர் நல்ல தன்மையுடன் கூறினார்: ”ஏன் நாம் எல்லோரும் ஒரு கடைசி தடவை தெரசாவைக் கூப்பிட்டுவிட்டு பிறகு வீட்டுக்குச் செல்லக்கூடாது?”

எனவே நாங்கள் மீண்டும் தொடங்கினோம். ”ஒன்று, இரண்டு, மூன்று, தெரசா!” ஆனால் இந்த முறை அது சரியாக வரவில்லை. பிறகு அங்கிருந்தவர்கள் வீட்டை நோக்கிச் சென்றார்கள், சிலர் ஒரு வழியிலும் பலர் வேறு வழியிலும்.

சதுக்கத்திற்குள் ஏற்கனவே நான் திரும்பி விட்டேன். அப்போது இன்னும் ஒரு குரல் தொடர்ந்து”தெ-ரெ-சா!” என்று கூப்பிடுவதாகத்  தோன்றியது.

யாரோ ஒருவர் கத்துவதற்காக நின்றிருக்க வேண்டும். மிகப் பிடிவாதமான யாரோ ஒருவர்

The Man Who Shouted Teresa-Numbers in the Dark [1999] Vintage Edition, New York translate by Tim Parks

reader2

Advertisements

பற்றி brammarajan
poet,translator,editor,critic,essayist, published 7 collections of poems an introductory book on Ezra Pound Edited SamaKala Ulagakkavithai(Contemporay World poetry) Guest Editor for Tamil museindia.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: