விஞ்ஞானம் மற்றும் இலக்கியம் பற்றி இரண்டு பேட்டிகள் இடலோ கால்வினோ-Calvino’s interviews on Science and Literature

இடலோ கால்வினோ


விஞ்ஞானம் மற்றும் இலக்கியம் பற்றி இரண்டு பேட்டிகள்

I
1.L’Approdo Letterario(Rome), January–March 1968; based on television interviews.
II.Interview for Kolo(Zagreb), October 1968. Topics were:
(1)the term “Neo-Enlightenment”;
(2)science and morals: “does subtituting science for morals call into question all existing ethics, as in your story “The Pursuit?”
(3)the need (as it might emerge from your t zero for the avant-garde writer to become a scientist.

உங்களுடைய எண்ணத்தில் இன்றைக்கு இலக்கியத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள உறவு என்ன?

நான் சமீபத்தில் ரோலன் பார்த் (Roland Barthes)எழுதிய அறிவியலும் இலக்கியமும் என்ற கட்டுரையைப் படித்தேன். தனக்கே உரித்தான ஒரு அடர்த்தி கொண்டதாக, அதன் சுய இருப்பு உடையதாக, மொழி மொழியாக இருப்பதான ஒரு பிரக்ஞைதான் இலக்கியம் என்று பார்த் எண்ணுவதாகத் தெரிகிறது. இலக்கியத்தைப் பொருத்தவரை மொழியானது என்றைக்குமே ஊடுருவித் தெரியக்கூடியதாக இருந்ததில்லை. மேலும் ஒரு “சிந்தனையை”யோ, ஒரு “நிஜத்தை”யோ, ஒரு “தகவலையோ”, ஒரு “அர்த்தத்தையோ” தெரிவிப்பதற்கான வெறும் கருவியாக என்றுமே இருந்ததில்லை. அதாவது அது தன்னைத் தவிர வேறு எதையும் அர்த்தப் படுத்துவதில்லை. இதற்கு மாறாக, அறிவியல் நமக்கு அறியத் தரும் ஒரு கருத்துருவாக்கமானது, ஒரு பாரபட்சமற்ற கருவியாக இருக்கிறது, அதை வைத்து நீங்கள் வேறு எதையோ சொல்லலாம், அதற்கு முற்றிலும் அந்நியமான ஒன்றினை அர்த்தப்படுத்தலாம். இந்த வேறுபடும் கருத்துருவாக்கல்கள்தான் அறிவியலையும் இலக்கியத்தையும் தனித்துத் தெரிய வைக்கின்றன. இந்தக் கருத்தோட்டத்தில் தொடர்ந்து செல்லும் போது, இலக்கியமானது அறிவியலை விட கூடுதலாக அறிவியல்பூர்வமானது என்ற நிலைப்பாட்டுக்கு பார்த் வந்து சேர்கிறார். மொழி என்றுமே சூதறியாததாக இருந்ததில்லை என்தை இலக்கியம் அறிந்துள்ளது. மேலும் எழுதும் போது எழுவதைத் தவிர வேறு புறவிதமான விஷயங்களை ஒருவர் சொல்லிவிட முடியாது என்பதை இலக்கியம் அறியும், எழுத்துக் கலை சம்மந்தமில்லாத ஒரு உண்மையை மொழி வெளிப்படுத்திவிட முடியாது. பார்த்தின் கருத்துப்படி மொழியின் அறிவியலானது இலக்கியமாக மறுவடிவமெடுக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது, முழுமையான எழுத்துக்கு. மேலும் மொழியின் சந்தோஷங்களுக்கான கோருதல்களையும் அது வைக்கும்.

ஆனால் இன்றைய அறிவியலை மெய்யாகவே முழு முற்றான ரகசியக் குறிப்பான்களின் நம்பிக்கை தளத்தில் வைத்து வரையறுக்க முடியுமா? அல்லது அது தனக்குள்ளாகவே இந்த சமயத்திற்குள் தனது மொழியியல் முறைகளை தொடர்ச்சியான கேள்விப்படுத்துதலாக ஆகிவிடவில்லையா? அறிவியலுக்கு எதிரான இந்த சச்சரவில் இன்று நிஜமாகவே இருக்கும் அறிவியலை விட சுய அறுதியும் கச்சிதத்தன்மையும் உள்ள ஒரு விதமான அறிவியலை எதிர்நோக்குவதாகத் தெரிகிறது.

The rest of the interview will be posted in installments

Advertisements

பற்றி brammarajan
poet,translator,editor,critic,essayist, published 7 collections of poems an introductory book on Ezra Pound Edited SamaKala Ulagakkavithai(Contemporay World poetry) Guest Editor for Tamil museindia.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: